இன்றைய நவீன உலகில், பேப்பர் கப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. டீ கடைகள், உணவகங்கள், திருமணமண்டபம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பேப்பர் கப்புகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பேப்பர் கப் தயாரிக்கும் தொழில், சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலாக இருப்பதால், பலரும் இந்த தொழிலை நோக்கி வருக்கின்றனர்.
பேப்பர் கப் தயாரிக்கும் முறை :° மூலப்பொருட்கள் தயார்: பேப்பர் கப் தயாரிக்க, பாலி எத்திலின் பூசப்பட்ட பேப்பர் ரோல்கள் (PE கோட்டட் பேப்பர் ரோல்ஸ்) தேவை.
°கப் வடிவம் வெட்டுதல்: இந்த பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் வைத்து கப் வடிவத்தில் வெட்டி எடுக்க வேண்டும்.
° சூடுபடுத்தி வடிவமைத்தல்: வெட்டப்பட்ட கப்புகளை இயந்திரத்தின் மூலம் சூடுபடுத்தி, வெளிப்புற வடிவட்டத்தை உருவாக்க வேண்டும்.
° அடிப்பகுதி இணைப்பு: கப்பின் அடிப்பகுதியை இணைத்து, கப்பின் விளிம்புகளை உருட்ட வேண்டும். இப்பொழுது பேப்பர் கப் தயார் நிலைக்கு வந்துவிடும்.
° தரக்கட்டுப்பாடு மற்றும் பேக்கிங்: தயாரான பேப்பர் கப்புகளை தரக்கட்டுப்பாடு சோதனைக்கு உட்படுத்தி, பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.
பேப்பர் தயாரிக்கும் மூலப்பொருட்கள் வாங்கும் இடம்:
° பாலி எத்திலின் பூசப்பட்ட பேப்பர் ரோல்கள் (PE கோட்டட் பேப்பர் ரோல்ஸ்) பேப்பர் மில்கள் மற்றும் பேப்பர் வணிகம் செய்பவர்களிடம் கிடைக்கும்
° உள்ளூரில் உள்ள பேப்பர் விற்பனை யாளர்களிடமும் இந்த மூலப்பொருட்களைப் பெறலாம்.
பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் வாங்கும் இடம்:
° பேப்பர் கப் தாயாருக்கும் இயந்திரங்கள் ஆன்லைன் வனிகதளங்கள் மற்றும் இயந்திரம் தயாரிப்பு நிறுவனங்களில் கிடைக்கும்.
° உள்ளூரில் உள்ள இயந்திர விற்பனை யாளர்களிடமும் வாங்கலாம்.
பேப்பர் கப் விற்பனை:
° தயாரான பேப்பர் கப்களை டீ கடைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்யலாம்.
° ஆன்லைன் வனிகத்தளங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யலாம்.
° உள்ளூர் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பேப்பர் கப்களை விற்பனை செய்யலாம்.
பேப்பர் தயாரிக்கும் தொழிலில் வெற்றி பெற, தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவது, நல்ல இயந்திரங்களைத் தேர்ந்தெடுப்பது, சந்தைப்படுத்துதல் உத்திகளைப் பின்பற்றிவது மற்றும் வாடிக்கையாளர்களை தக்கவைப்பது அவசியம். மேலும், பேப்பர் கோப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தகுதிகளை ஆராய்வது முக்கியம். மாதிரி கோப்பைகளை வாங்கி தரம் மற்றும் வடிவத்தை ஆராய்வது நல்லது. கோப்பைகளின் தடிமன், மனம் ஆகியவற்றை பாரிசோதிப்பது நல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக
Please Comments