கப் சாம்ராணி
கப் சாம்ராணி, வீடுகளில் மட்டுமல்லாமல், அலுவலகங்கள், கடைகள் மற்றும் கோவில்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பூஜை பொருளாகும். இதை வீட்டில் எளிய முறையில் எப்படி தயாரிப்பது மற்றும் அதனால் கிடைக்கும் வருவாய் பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்
தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
° சாம்ராணி தூள்
° குங்கிலியம்
° வெட்டிவேர்
° சந்தனத்துள்
° மூலிகை பொருட்கள் (விருப்பம் இருந்தால்)
° மரத்தூள்
° கரித்துள்
° கப் சாம்ராணி அச்சுகள்
° சிறிய சாம்ராணி இயந்திரம் (விருப்பம் இருந்தால்)
மூலப்பொருட்கள் கலவை:
° சாம்ராணி தூள், குங்கிலியம், வெட்டிவேர், சந்தன தூள், மற்றும் முலிகை பொருட்கள் (விருப்பம் இருந்தால்) ஆகியவறை ஒன்றாக கலந்து தூளாக்கவும்.
° மரத்தூள், மற்றும் கரித்துள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
° தூளாக்கப்பட்ட சாம்ராணி கலவையை மரத்தூள் மற்றும் கரித்துள் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
மாவு தயாரித்தல்:
° கலவையில் சிறி5 தண்ணீர் தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு பிசையவும்.
கப் சாம்ராணி தயாரித்தல்:
° கப் சாம்ராணி அச்சுகளில் மாவை நிரப்பவும்.
°அச்சுகளை அழுத்தி சாம்ரானியை வெளியே எடுக்கவும்.
தயாரிக்கப்பட்ட கப் சாம்ராணிகளை ஒரு தட்டில் வைத்து வெயில் அல்லது நிழலில் நன்கு காயவைக்கவேண்டும். நன்கு காய்ந்த பின், கப் சாம்ராணிகள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும்.
பேக்கிங் செய்தல்:
தயாரித்த கப் சாம்ராணிகளை கவர்ச்சிகரமான பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
° பேக்கிங் கவர் கவர்ச்சியாக இருக்கவேண்டும் அப்பொழுதான் வாடிக்கையாளர்களை கவர முடியும்.
° கப் சாம்ராணி பேக்கிங் மெஷின் மூலம் பேக்கிங் செய்யலாம்.
° கப் சாம்ராணி பேக்கிங் செய்வதற்கு, முதலில் கப் சாம்ராணியின் அளவு மற்றும் வடிவத்திற்கு ஏற்ற பேக்கிங் பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
° பேக்கிங் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்கள், அட்டை பெட்டிகள் அல்லது பேப்பர் பைகளாக இருக்கலாம்.
° பேக்கிங் பொருட்கள் மீது உங்கள் பெயர் மற்றும் லோகோவை அச்சிடலாம்.
° பேக்கிங் பொருட்களில் கப் சாம்ராணி யின் பயங்கள் மற்றும் நன்மைகள் பற்றிய தகவல்களையும் அச்சிடலாம்.
° பேக்கிங் செய்த கப் சாம்ராணிகளை விற்பனைக்கு அனுப்பும் முன், அவற்றின் தரம் மற்றும் பேக்கிங் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கூடுதல் தகவல்கள்:
° சாம்ராணி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளில் கிடக்கின்றன.
° மூலப்பொருட்களை நாட்டு மருந்து கடைகள் மற்றும் மொத்த மளிகை கடைகளில் வாங்கலாம்.
° கப் சாம்ராணி தயாரிப்பில், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவது அவசியம்.
° சுகாதாரமான முறையில் சாம்ராணி தயாரிப்பது அவசியம்.
° தயாரித்த கப் சாம்ரானியை கவர்ச்சிகரமான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
விற்பனை செய்யும் இடம்:
° கோவில்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்யலாம்.
° ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் விற்பனை செய்யலாம்.
° உள்ளூர் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்.
° பண்டிகை மற்றும் சந்தை கடைகளில் விற்பனை செய்யலாம்.
இந்த எளிய முறைகளை பின்பற்றி, வீட்டில் இருந்தபடியே சுத்தமான மற்றும் தரமான கப் சாம்ராணியை தயாரிக்கலாம். இது உங்கள் பூஜை அனுபவத்தை மேம்படுத்துவதோடு, ஒரு சிறு தொழிலாகவும் உங்களுக்கு வருமானம் தரும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Please Comments