காளான் வளர்ப்பு
தோட்டக்கலையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. மக்களிடையே ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தொழில்களுக்கு மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்ட முடிகிறது.
வெறும் 2லட்சம் மட்டுமே முதலீடு செய்து காளான் வளர்த்தல் மற்றும் பதப்படுத்துதல் தொழிலில் அபரிமிதமான லாபத்தை ஈட்டலாம் என்று தோட்டக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலமாக காளான் வளர்ப்பு தொழில் வேகமாக பரவி வருகின்றனர். அதன் சுவை, ஊட்டச்சத்து முக்கியமாக கருதப்படுகிறது.
சைவப் பிரியர்களின் அசைவ ஆசைக்கு காளான் நிச்சயம் தீனி போடும் அளவுக்கு அதன் சுவையும் மணமும் அமைந்துள்ளது. உடல் எடை குறைப்பு பற்றி கவலைப்படுபவர்கள் காளான்களை விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு அடங்கியுள்ளது. அத்துடன் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்து களையும் காளான் கொண்டுள்ளது.
காளான்களில் உள்ள சத்துக்கள்:
° புரதம்
° வைட்டமின் (பி, டி )
° தாதுக்கள் ( பொட்டாசியம், இரும்பு, செலினியம் )
° குறைந்த கொழுப்பு
காளான் வகைகள்:
° சிப்பி காளான் (Oyster Mushroom)
° பால் காளான் ( Milky Mushroom )
° பட்டன் காளான் ( Button Mushroom )
° வைக்கோல் காளான் ( Paddy Straw Mushroom )
காளான் வளர்ப்புக்கு தேவையான மூல பொருட்கள்
° காளான் விதைகள் (Spawn )
° வைக்கோல் (கோதுமை அல்லது நெல்)
° பாலித்தீன் பைகள்
° தண்ணீர்
° தெர்மாமீட்டர்
° வாளி
° போர்வை
° தெர்மாகோல்
காளான் வளர்ப்பு முறை:
° வைக்கோல் தயாரிப்பு: வைக்கோலை சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் 8- 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
° ஊறிய வைக்கோலை ஆவியால் வேகவைத்து, கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
° கிருமி நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை பாலிதீன் பைகளில் நிரப்ப வேண்டும்.
° வைக்கோல் அடுக்குகளுக்கு இடையே காளான் விதைகளை தூவ வேண்டும்.
° பைகளை இருட்டான ஈரப்பதமான இடத்தில் வைக்க வேண்டும்.
° வெப்பநிலை 25-30 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும்.
° ஈரப்பதத்தை பராமரிக்க அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
° காளான்கள் வளர 20 - 25 நாட்கள் ஆகும்.
° காளான்கள் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்யலாம்.
விற்பனை மற்றும் வருமானம்:
° காளான்களை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்கலாம்.
° காளான் வகையை பொறுத்து விலை மாறுபடும்.
° ஒரு கிலோ காளான் உற்பத்தி செலவு தோராயமாக ரூ. 30- 40 வரை ஆகும்.
° மொத்த விற்பனையில் ஓது கிலோ காளான் ரூ. 90- 100 வரை விற்கலாம்.
° சில்லறை விற்பனையில் ஓது கிலோ காளான் ரூ. 150- 175 வரை விற்கலாம்.
° நேரடி விற்பனையில் ஒரு கிலோ காளான் ரூ. 225 முதல் 250 வரை விற்பனை செய்யலாம்.
கூடுதல் தகவல்:
° தரமான காளான் விதைகளை பயன்படுத்துவது அவசியம்.
° காளான் வளர்ப்புக்கு சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அவசியம்.
° காளான் வளர்ப்பு பற்றிய கூடுதல் தகவல்களை பெற அரசு வேளாண்மைத் துறையை அணுகலாம்.
எச்சரிக்கை:
ஆஸ்துமா, மூச்சு (சுவாச) பிரச்சனை உள்ளவர்கள் காளான் உற்பத்தித் தொழிலை தொடங்க வேண்டாம். அங்கக வேளாண்மை (Organic Farming) செய்யும் பண்ணைகளில் காளான் உற்பத்தி செய்ய முடியாது காரணம் டிரைக்கோடீடெர்மாவிரிடி, சுடோமோனாஸ் போன்றவைகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படும்-இவை அனைத்தும் பூஞ்சை கொல்லிகள்- காளான் என்பது ஒருவகை பூஞ்சை ஆகும்.
தூங்கும் இடத்திலோ அல்லது வீட்டிற்குள்ளோ காளான் உற்பத்தி செய்யக்கூடாது மனிதர்களைப் போல் மூச்சு காற்றை சுவாசித்து கரிம அமில வாயுவை வெளியேற்றும்.
காளான் வளர்ப்பு தொழில் தொடங்க உங்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு லாபகரமான தொழில் என்பதால், நீங்கள் நிச்சயமாக நம்பிக்கையுடன் தொடங்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக
Please Comments