சணல் பை: எளிதில் தயாரித்து விற்பனை


      பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியிருப்பதை அடுத்து, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிபைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயிண்ட்!. மக்கள் அனைவரும் சணல் பையை பயன்படுத்துவதால் சந்தையில் இதன் மதிப்பு கூடியிருக்கிறது.

     சணல் பைகள் தயாரிப்பு தொழிலில் இயந்திரங்கள், முதலீடு, மூலப்பொருட்கள், பையின் அளவு மற்றும் விற்பனை முறைகள் பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு:

இயந்திரங்கள்:

தையல் இயந்திரம்:

     ◆ சணல் துணியை தைப்பதற்கு வலுவான தொழில்துறை தையல் இயந்திரம் தேவைப்படும்.

     ◆ சாதாரண தையல் இந்திரங்களை விட, தொழில்துறை தையல் இந்திரங்கள் சணல் துணியை எளிதாக கையாளும்.

     ◆ தொழில்துறை தையல் இந்திரங்கள் 10000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை கிடைக்குகின்றன.

ஓவரிலாக் இயந்திரம்:

     ◆ சணல் துணியின் விளிம்புகளை தைத்து, அவை பிரிந்துவிடாமல் இருக்க ஓவரிலாக் இயந்திரம் பயன்படுகிறது.

     ◆ இது பை தயாரிப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     ◆ ஓவர்லாக் இயந்திரங்கள் 8000 ரூபாய் முதல்  20000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

கட்டிங் இயந்திரம்:

     ◆ சணல் துணியை  தேவையான அளவுகளில் வெட்டுவதற்கு கட்டிங் இயந்திரம் தேவை.

     ◆ இது நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தும்.

     ◆ கட்டிங் இயந்திரங்கள் 5000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

முதலீடு:

     ◆ சணல் பை தயாரிப்பு தொழிலின் முதலீடு, தொழிலின் அளவை பொறுத்து மாறுபடும்.

     ◆ சிறிய அளவில் தொடங்கினாள், 50000 ரூபாய் முதல் 100000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படலாம்.

     ◆ பெரிய அளவில் தொடங்கினாள், இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிக முதலீடு தேவைப்படும்.

     ◆ முதலீட்டில், இயந்திரங்கள் விலை, வாடகை, மூலப்பொருட்களின் விலை, பணியாளர்களின் ஊதியம்  ஆகியவை அடங்கும்.

     ◆ வீட்டில் ஏற்கனவே தையல் இயந்திரம், டேபிள் போன்றவை இருந்தால் ரூபாய் 10000 வரை  செலவு குறைய வாய்ப்பு உள்ளது.

மூலப்பொருட்கள்:

சணல் துணி:

     ◆ சணல் துணி மொத்த விற்பனை கடைகள் அல்லது ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கும்.

     ◆ பையின் வடிவமைப்புக்கு ஏற்ற தரமான சணல் துணியை தேர்ந்தெடுப்பது அவசியம்.

     ◆ சணல் துணியின் விலை மீட்டருக்கு 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன. சணல் துணியின் தரம் மற்றும் அளவை பொறுத்து விலை மாறுபடும்.

தையல் நூல்கள்:

     ◆ சணல் துணியை தைப்பதற்கு வலுவான தையல் நூல்கள் தேவை.

     ◆ நூல்கள் உள்ளூர் கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் கிடைக்கும்.

     ◆ நூல்களின் விலை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன.

அலங்காரப் பொருட்கள்:

     ◆ ஜிப், பட்டன்கள், கைப்பிடிகள் போன்ற அலங்காரப் பொருட்கள் பைகளை அழகுபடுத்த பயன்படும்.

     ◆ இவை கைவினைப் பொருட்கள் கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் கிடைக்கும்.

     ◆ ஜிப், பட்டன்கள், கைபிடிகள் போன்ற அலங்காரப் பொருட்களின் விலை அதன் வடிவமைப்பு மற்றும் தரத்தை பொறுத்து மாறுபடும்.

சணல் பையின் அளவு:

     ◆ சணல் பைகள் பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்படலாம்.

     ◆ சிறிய பைகள்: மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்ற சிறிய பொருட்களை எடுத்து செல்ல ஏற்றது.

     ◆ நடுத்தர பைகள்: துணிகள், புத்தகங்கள் போன்ற நடுத்தர பொருட்களை எடுத்து செல்ல ஏற்றது.

     ◆ பெரிய பைகள்: பயணத்தின் போது பொருட்களை எடுத்து செல்ல ஏற்றது.

சணல் பைகளின் அளவு:

     ◆ வாடிகையாளர்களின் தேவை  மற்றும் பையின் பயன்பாட்டை பொறுத்து பையின் அளவு மாறுபடும்.

     ◆ சணல் பைகள் தயாரிக்கும் நிறுவனகள், வாடிக்கையாளர்களின்  விருப்பத்திற்கேற்ப, பல்வேறு அளவுகளில் சணல் பைகளை தயாரிக்கின்றன.

சணல் பைகளை விற்பனை செய்யும் முறைகள்:

     ◆ உள்ளூர் சந்தைகள் மற்றும் கடைகள்: உள்ளூர் சந்தைகள், மளிகை கடைகள், துணிக்கடைகள் போன்ற இடங்களில் சணல் சணல் பைகளை விற்பனை செய்யலாம்.

     ◆ ஆன்லைன் விற்பனை:அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்கள் மூலம் சணல் பைகளை விற்பனை செய்யலாம்.

     ◆ சமூக ஊடகங்கள்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் சணல் பைகளை விளம்பரப்படுத்தி விற்பனை செய்யலாம்.

     ◆ கைவினை பொருட்கள் கண்காட்சி: கைவினை பொருட்கள் கண்காட்சிகளில் கலந்து கொண்டு சணல் பைகளை விற்பனை செய்யலாம்.

     ◆ சுற்றுசூழல் ஆர்வலர்கள்: சுற்று சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பொருட்களை விரும்புபவர்களுக்கு சணல் பைகளை விற்பனை செய்யலாம்.

     சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் பேக் போன்றவை சணலை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.

     சுற்று சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்குகின்றனர். எனவே, சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

     சணல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் வெற்றி அடையுங்கள்!.

கருத்துகள்